நேபாள பிரதமரின் மூன்று முக்கிய ஆலோசகர்களுக்கு கொரோனா தொற்று உறுதி.!

நேபாள பிரதமர் பிரசாத் சர்மா ஒளியின் தலைமை ஆலோசகரும் அவரது மற்ற இரண்டு உதவியாளர்களுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்ப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிரதமரின் தலைமை ஆலோசகர் பிஷ்ணு ரிமல், பத்திரிகை ஆலோசகர் சூர்யா தாபா மற்றும் வெளியுறவு ஆலோசகர் ராஜன் பட்டாராய் ஆகியோர் கொரோனா பரிசோதனை செய்துள்ளனர். அதன், சோதனை முடிவில் கொரோனா இருப்பது உறுதியானது.

இது குறித்து, அவர்களுது ட்விட்டரில் தங்கள் தொடர்புக்கு வந்த அனைவரையும் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொண்டனர். நேபாளத்தில் புதியதாக 2,120 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதால், மொத்த கொரோனா எண்ணிக்கை இன்று 84,570 ஆக உயர்ந்தது.

 

 

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.