ஐரோப்பிய நாடுகளில் கட்டுக்குள் வரும் கொரோனா.! பாதிப்பு படிப்படியாக குறைவு.!

ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து வருகிறது.

சீனா உஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் சுமார் 200 நாடுகளில் பரவியுள்ளது. இதனால் பாதிப்பும், உயிரிழப்பும் தினந்தோறும் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதன் காரணமாக பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. உலகளவில் இதுவரை 29,96,614 பேர் பாதிக்கப்பட்டு, 2,07,023 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8,81,847 ஆக உள்ளது. அதிகபட்சமாக அமெரிக்காவில் 9,87,322 பேர் பாதிக்கப்பட்டு, 55,415 பேர் பலியாகியுள்ளனர். இதையடுத்து ஐரோப்பிய நாடுகளான இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற நாடுகளில் வைரஸ் தாக்குதலுக்கு பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் படிப்படியாக குறைந்து வருகிறது.

இத்தாலியில் கொரோனா நிலவரம் :

இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,97,675 ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26,644 ஆகவும் உள்ளது. இங்கு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 64,928 ஆக இருக்கின்றன. நேற்று மட்டும் அங்கு 260 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஸ்பெயினில் கொரோனா நிலவரம் :

ஸ்பெயின் நாட்டில் கொரோனா வைரசால் 2,26,629 பாதிக்கப்பட்டு, 23,190 பேர் பலியாகியுள்ளனர். நேற்று மட்டும் 288 பேர் உயிரிழந்துள்ள நிலையில், வைரஸில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,17,727 ஆக உள்ளது.

பிரான்சில் கொரோனா நிலவரம் :

பிரான்ஸ் நாட்டில் 1,62,100 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று மட்டும் 242 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை 22,856 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். 44,903 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இங்கிலாந்தில் கொரோனா நிலவரம் :

இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,52,840 பேர் ஆகவும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20,732 ஆகவும் இருக்கின்றது. அந்நாட்டில் நேற்று ஒரே நாளில் 413 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடப்படுகிறது.

ஜெர்மனியில் கொரோனா நிலவரம் :

ஜெர்மனியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,57,770 ஆகவும், கொரோனாவுக்கு பலியாகியோர் எண்ணிக்கை 5,976 ஆகவும் உள்ளது. நேற்று மட்டும் 67 பேர் உயிரிழந்துள்ளனர் நிலையில், இதுவரை 1,14,500 பேர் குணமடைந்து உள்ளார்கள். இந்த நிலையில் ஐரோப்பிய நாடுகளில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பும், உயிரிழப்பும் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்