கொரோனா சிகிச்சைகள் எதற்கும் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை – WHO அறிக்கை

கொரோனா வைரசுக்கு எதிரான சிகிச்சைகள் ஒன்றிற்கும் இதுவரை ஒப்புதல் அளிக்கப்படவில்லை என உலக சுகாதார நெருக்கடி திட்ட தொழில்நுட்ப பிரிவு தலைவர் மரியா கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே தான் வருகிறது. இதுவரை உலகம் முழுவதும் 4,640,230 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 308,827 பேர் உயிரிழந்துள்ளனர். 

இந்நிலையில், இந்த வைரசுக்கு எதிராக  மருத்துவமுறைகள், நட்டு மருத்துவமுறைகள் என பல பக்கத்தில் இருந்து சில மருந்துகள் பரீசீலிக்கப்பட்டாலும், சரியான மறுத்து எது என கண்டறியப்படாமல் உள்ளது. 

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் நெருக்கடி திட்ட தொழிநுட்ப தலைவர் மரியா வான் கொர்க்கோவ் அவர்கள் கூறுகையில், ஆய்வுகூட பரிசோதனையில் ஏராளமான சிகிச்சை முறைகள் உள்ளது.

இதில் எந்த சிகிச்சை முறைக்கும் இதுவரை உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் அளிக்கவில்லை எனவும், ஆய்வுகூட பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும், அதன் முடிவுகள் வெளியான பிறகே எந்த சிகிச்சை முறைக்கு ஒப்புதல் அளிக்கப்படும் என்பதை கூறலாம் என தெரிவித்துள்ளார். 

author avatar
Rebekal