கொரோனா எதிரொலி : கிலோ ரூ.800 தொட்ட ஆட்டுக்கறி.!

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது இந்தியாவில் பரவி வருகிறது. இதனால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் பங்குச்சந்தை வர்த்தகம் சரிவை கண்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் மற்றும் பறவை காய்ச்சல் கேரளாவில் வேகமாகப் பரவி வருவதால் கோழிக்கறி விலை வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால் ஆடு இறைச்சி கிலோ ரூ.800-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தமிழக கேரளா எல்லையான தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர், செங்கோட்டை பாவூர்சத்திரம் ஆலங்குளம் சுரண்டை உள்ளிட்ட இடங்களிலும் கொரோனா மற்றும் பறவைக் காய்ச்சல் வதந்திகளால் கோழிக்கறிக் கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. இதனால் ஆடு இறைச்சி விற்பனையும், மீன் விற்பனையும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. 600 ரூபாய்க்கு விற்ற ஆட்டிறைச்சி தற்போது கிலோ 800 ரூபாயை எட்டியுள்ளது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்