கொரோனா எதிரொலி.! 60% ரயில் டிக்கெட்டை ரத்து செய்த பயணிகள்.!

கொரோனா முன்னெச்சரிக்கை காரணமாக ரயில் பயணத்தை பொதுமக்கள் மேற்கொள்வதை  தவிர்த்து வருகின்றன. அதனால் மார்ச் மாதத்தில் இதுவரை 60% ரயில் டிக்கெட்டை பயணிகள் ரத்து செய்துள்ளதாக நாடாளுமன்ற நிலைக்குழுவிடம் ரயில்வே அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கொரோனா வைரஸ் உலகமுழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வருகிறது.கொரோனா வைரசால் உலகம் முழுவதும் நேற்றுவரை 1,79111 பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 7426 இறந்துள்ளனர்.

மத்திய ,மாநில அரசுகள் கொரோனா தடுக்க பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மேலும் பொதுமக்கள் வருகின்ற 31-ம் தேதி வரை கூட்டம் கூட வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது.

பல மாநிலங்களில் பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் ஆகியவை மார்ச் 31-ம் தேதி வரை மூடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
murugan