கொரோனா பாதிப்பு தேசிய வளர்ச்சி விகிதம்.! 4 தென் மாநிலங்களில் வேகமாக பரவும் கொரோனா.!

கொரோனா பாதிப்பு தேசிய வளர்ச்சி விகிதத்தை விட வேகமாக வளர்ந்து வரும் மாநிலங்களில் தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளன.

இந்தியாவில், கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் அதிகரித்து வருகின்றது. அதிலும், முக்கியமாக தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகா, மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய 4 தென் மாநிலங்களில்  தான் கொரோனா அதிகரித்து காணப்படுகிறது. இந்த 4 மாநிலங்களும் அதிக கொரோனா பாதிப்பு கொண்ட முதல் 10 மாநிலங்களின் பட்டியலில் உள்ளன.

கடந்த ஒரு வாரத்தில், தமிழகத்தில் 25,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை  1 லட்சத்து 6,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்ட்டுள்ளனர். கர்நாடகா மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தலா 8,000-க்கும் மேற்பட்டடோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவில் கடந்த 1 வாரத்தில் சுமார் 5,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தெற்கு மாநிலங்களில் கேரளா மாநிலம் தான் கடந்த ஒரு வாரத்தில்  வெறும் 1,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்மாநிலத்தில், இதுவரை  6,000-க்கும் குறைவாக பாதிப்பு உள்ளது. இறப்பு எண்ணிக்கை மிகக் குறைவு  26 பேர் உயிழந்துள்ளனர். இதனால், நாட்டில் மிகக் குறைந்த இறப்பு விகிதங்களைக் கொண்ட ஒரு மாநிலமாக கேரளா உள்ளது.

author avatar
murugan