உலகளவில் 15 லட்சத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு.!

உலகம் முழுவதையும் சுமார் 200 நாடுகளில் பரவி இருக்கும் கொரோனா வைரஸை எதிரித்து உலக நாடுகள் போராடி வருகின்றன. இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளில் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க அனைத்து நாடுகளும் போட்டி போட்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. தற்காலிகமாக மலேரியா காய்ச்சலுக்கு பயன்படுத்தும் மருந்தை கொரோனாவுக்கு பயன்படுத்தலாம் என அமெரிக்கா அண்மையில் அறிவித்திருந்தது. இதனால் அந்த அமருத்துக்கு கூட தட்டுப்பாடு நிலவி வருகிறது. உலகளவில் அமெரிக்கா, இத்தாலி, சீனா, பிரான்ஸ், ஸ்பெயின், ஈரான், இங்கிலாந்து போன்ற நாடுகளில் அதிகம் பாதிப்பும், உயிரிழப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனிடையே உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 15 லட்சத்தை தண்டியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போதைய நிலவரப்படி, 1,523,898 ஆகவும், உயிரிழப்பின் எண்ணிக்கை 88,956 ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும், இந்த கொரோனா வைரஸ் உருவாகி நான்கு மாதங்களில் தற்போது வரை 2 மில்லியன் மக்களை தாக்கும் அளவிற்கு வேகமாக பரவி உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 332,800 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். நேற்று ஒரே நாளில் மட்டும் 82500 பேர் உலகம் முழுக்க கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்