இத்தாலியில் குறையும் கொரோனா உயிரிழப்பு

இத்தாலியில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
கொரோனா வைரசால் உலக நாடுகளில் தினமும் பாதிப்பும் , உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது. அதிலும் அதிகமாக ஐரோப்பிய நாடுகள் கொரோனா கோரப்பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன. அதில் இத்தாலி நாடும் ஒன்று.இங்கு கொரோனாவால் 147,577 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 30 ஆயிரத்து 455 பேர் வைரஸ் பாதிப்பில் இருந்து குணமாகியுள்ளனர்.
 
இந்நிலையில் நேற்று மட்டும் இத்தாலியில் வைரஸ் தாக்குதலுக்கு  570 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இத்தாலியில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 18, 849 ஆக அதிகரித்துள்ளது. ஆனாலும், கடந்த வாரங்களுடன் ஒப்பிடும் போது கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.