தமிழக செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் மு.பெ.சாமிநாதனுக்கு கொரோனா உறுதி..!

தமிழக செய்தித்துறை அமைச்சர் வெள்ளகோயில் மு.பே.சாமிநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு நிலையில், தற்போது ஓமைக்ரான் தொற்று பரவி வருவதால், மேலும் தீவிரமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் தமிழக அரசு ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில் தற்போது தமிழக செய்தித்துறை அமைச்ச சாமிநாதனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானதை அடுத்து, அவர் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.