அமேசான் ஊழியர்கள் 20,000 பேருக்கு கொரோனா பாதிப்பு..!

உலகின் முன்னணி நிறுவனமான அமேசானில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து அமெரிக்காவில் பணியாற்றும்  20,000 ஊழியர்களுக்கு கொரோனா ஏற்பட்டதாக அமேசான் நேற்று தெரிவித்தது.

அமேசான் ஒரு நாளைக்கு 50,000  ஊழியர்கள் என்ற வீதத்தில் பரிசோதனைகளை செய்ததாகவும் எதிர்பார்த்ததை விட குறைவான கொரோனா  தொற்று ஏற்பட்டதாக அமேசான் தெரிவித்துள்ளது.

அமேசான் மற்றும் ஹோல் ஃபுட்ஸ் தொழிலாளர்களிடையே நோய்த்தொற்றின் வீதம் பொதுவான அமெரிக்க மக்கள்தொகையைப் போலவே இருந்தால், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 33,000 ஐ விட அதிகமாக இருக்கும் என்று அமேசான் நிறுவனம் தெரிவித்தது.

author avatar
murugan