கோவையில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடிப்பு : 10-க்கும் மேற்பட்ட குடிசை வீடுகள் கருகின…!!

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வெடித்த விபத்தில் பத்து குடிசை வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.

மேட்டுப்பாளையம் அருகே உள்ள ஓடந்துறையில், பாக்கு தோப்புகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் தனியார் இடத்தில் குடிசைகளை அமைத்து தங்கியுள்ளனர். இந்த நிலையில் தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசை வீடு ஒன்றில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. குடிசை வீடு என்பதால் மளமளவென பெருகிய தீ, அருகே இருந்த மற்ற குடிசை வீடுகளுக்கும் பரவியது. இதில் 11 குடிசை வீடுகள் எரிந்து சேதமாகின.

அந்த சமயத்தில் வீடுகளில் இருப்போர் வேலைக்கு சென்றுவிட்டதால் உயிரிழப்புகள் ஏதும் நிகழவில்லை. ஆனால் குடிசை வீடுகளில் இருந்த பணம், நகைகள், பீரோ, கட்டில், துணிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தீக்கிரையானது.