தடுப்பூசி குறித்த சர்ச்சை கருத்து-மன்சூர் அலிகான் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு..!

தடுப்பூசி குறித்த சர்ச்சையான கருத்து தெரிவித்த மன்சூர் அலிகான் மீது போலீசார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நடிகர் விவேக் மாரடைப்பு காரணமாக வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.ஆனால்,சிகிச்சை பலனின்றி விவேக் உயிரிழந்தார்.

இந்த நிலையில் விவேக் மரணம் குறித்து பேசிய நடிகர் மன்சூர் அலிகான்,தடுப்பூசி போட்டுக் கொண்ட காரணத்தினால் தான் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டது என்று குற்றம் சாட்டினார். அதுமட்டுமல்லாமல், மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டாம் என்றும் கூறினார்.

இதனையடுத்து,பிரதமர் மக்கள் நல திட்டங்கள் விளம்பர அமைப்பின் செயலாளர் சோமு ராஜசேகரன் என்பவர்,நடிகர் மன்சூர் அலிகான் மீது நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல் ஆய்வாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் மன்சூர் அலிகான் மீது,உயிருக்கு ஆபத்தான தொற்று பரப்பக்கூடிய செயலில் ஈடுபடுதல்,கலகம் செய்ய தூண்டிவிடுதல்,பேரிடர்  மேலாண்மை சட்டம்,தொற்றுநோய் தடுப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வடபழனி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளார்கள்.