29 C
Chennai
Wednesday, June 7, 2023

தமிழகம் முழுவதும் 66,70,825 பேர்… தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியீடு!

தமிழகம் முழுவதும் 66,70,825 பேர் வேலை வாய்ப்பிற்காக பதிவு...

Pinky….சும்மா கும்முனு இருக்கீங்க.! ஐஸ்வர்யா மேனனின் ஹாட் புகைப்படம்…

நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழ் சினிமாவில் சித்தார்த் நடிப்பில்...

காங்கிரஸ் வெற்றி..! கர்நாடக மக்களுக்கு நன்றி தெரிவித்த சோனியா காந்தி..!

சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றிக்கு காரணமாக இருந்த கர்நாடக மக்களுக்கு சோனியா காந்தி நன்றி கூறியுள்ளார்.

கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது. இதன்பின், கர்நாடகாவின் புதிய முதல்வராக சித்தராமையாவும், துணை முதல்வராக டி.கே.சிவகுமார் இன்று பதவியேற்றுக்கொண்டனர். இந்த பதவியேற்பு விழா பெங்களூருவில் உள்ள கண்டீரவா மைதானத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில் ராகுல்காந்தி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட பல முக்கிய அரசியல் கட்சி தலைவர்களும் இதில் பங்கேற்றனர். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு காரணமாக இருந்த கர்நாடக மக்களுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி நன்றி கூறியுள்ளார்.

மேலும், புதிதாக அமைக்கப்பட்டுள்ள அரசு மாநிலத்தின் வளர்ச்சிப் பாதையில் செயல்படும் என்று உறுதியளித்ததோடு, முதல்வர் சித்தராமையா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற ஒப்புதல் அளித்தது பெருமைக்குரியது என்று கூறியுள்ளார்.