உச்சநீதீர்மன்ற உத்தரவு மீறல்.? அமித்ஷா, யோகி ஆதித்யநாத், நட்டா மீது காங்கிரஸ் பரபரப்பு புகார்.!

அமித்ஷா, யோகி ஆதித்யநாத், நட்டா மீது காங்கிரஸ் கட்சியினர் புகார் அளித்துள்ளனர். 

கர்நாடக தேர்தல் நெருங்கும் வேலையில் தேர்தல் பிரச்சாரங்கள் மிக தீவிரமடைந்து வருகின்றன. பிரதான கட்சி தலைவர்கள் தங்கள் தேர்தல் வாக்குறுதிகளோடு மற்ற கட்சியினர் மீது விமர்சனம் வைக்கவும் தவறவில்லை. இதனால் வார்த்தை மோதல்கள் , புகார்கள் என பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டு இருக்கிறது கர்நாடக தேர்தல் களம்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர்கள் அஜய் மக்கான், விவேக் தங்கா, சல்மான் குர்ஷித், பவன் கேரா ஆகியோர் நேற்று தேர்தல் ஆணையத்தில் நேற்று புகார் அளித்துள்ளனர். அவர்கள் மத்திய அமைச்சர் அமித்ஷா, உத்திர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பாஜக தேசிய தலைவர் ஜேபி.நட்டா ஆகியோர் மீது புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரில், அமித்ஷா, யோகி ஆதித்யநாத், ஜே.பி.நட்டா ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தில் வெறுப்பு அரசியலில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, அமித்ஷாபேசுகையில், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியமைத்தால் கலவரம் வெடிக்கும் என பேசியுள்ளார். எந்த அர்த்தத்தில் அவ்வாறு அவர் பேசினார் என கூறி, இவ்வாறு மேற்கண்ட மூவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளனர்.

மேலும், அண்மையில் உச்சநீதிமன்றம் , வெறுப்பு அரசியலில் ஈடுபடுவோர் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டதை குறிப்பிட்டு அதற்கான நகல்களையும் தேர்தல் ஆணையத்திடம் காங்கிரஸ் கட்சியினர் அளித்தனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.