ஜே.பி.நட்டாவுக்கு இருக்கும் அதிகாரத்தை விட மல்லிகார்ஜுனேவுக்கு அதிக அதிகாரம்.! கார்த்திக் சிதம்பரம் பதிலடி.!

ஜேபி.பட்டாவுக்கு கட்சியில் இருக்கும் அதிகாரத்தை விட 100 மடங்கு அதிக அதிகாரம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு உண்டு. – காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம். 

அண்மையில் ஒரு நிகழ்வில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியில் கட்சி தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே பெயரளவுக்கு தான் தலைவராக இருக்கிறார். அவரை பின்னாடி இருந்து இயக்குவது வேறு ஆள். என சோனியா காந்தி, ராகுல் காந்தியை குறிப்பிட்டு பேசியிருந்தார் பிரதமர் மோடி.

ஜே.பி.நட்டா – கார்கே : இதற்கு பதில் அளிக்கும் விதமாக காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாஜகவில் தலைவராக இருக்கும் ஜேபி.பட்டாவுக்கு கட்சியில் இருக்கும் அதிகாரத்தை விட 100 மடங்கு அதிக அதிகாரம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு வழங்கப்பட்டுள்ளது. என கூறினார்.

50 ஆயிரம் வாக்கு வித்தியாசம் : அடுத்ததாக அவர் கூறுகையில், திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பாக களமிறங்கிய இ.வி.கே.எஸ்.இளங்கோவன் குறைந்தபட்சம் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என குறிப்பிட்டார்.

ஒற்றுமை யாத்திரை : காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மேற்கொண்ட பாரத ஒற்றுமை யாத்திரையினால் காங்கிரஸ் கட்சிக்கு பல பலன்கள் உண்டு. அடுத்து, கிழக்கு முதல் மேற்கு மாநிலங்களை மையப்படுத்தி வைத்து ஓர் பயணம் மேற்கொண்டால் அது கட்சிக்கு நல்ல பலனை தரும் என கூறினார்.

2024 தேர்தல் : அடுத்ததாக, 2024 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் உடன் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியிருப்பது முழுக்க முழுக்க உண்மை. எனவும், ஆரம்பத்தில் இருந்தே பாஜக மேல்தட்டு வர்க்கத்திற்கு சாதகமாக செயல்பட்டு வருகிறது என்றும் காங்கிரஸ் எம்பி கார்த்திக் சிதம்பரம் குற்றம் சாட்டினார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment