போட்டியிட இன்றே கடைசி நாள்.. யார் புதிய காங்கிரஸ் தலைவர்.?!

காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர்கள், சசிதரூர், திக் விஜயசிங் , மல்லிகார்ஜுன கார்கே  ஆகியோர் போட்டியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று தான் வேட்புமனுத்தாக்கல் செய்ய கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது. 

காங்கிரஸ் தலைவர் பொறுப்புக்கு வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் யார் யாரெல்லம் போட்டியிட உள்ளார் என்கிற எண்ணம் பலர் மனதில் எழுந்துள்ளது

ஏற்கனவே, ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் போட்டியில் போட்டியிட முயன்று, பின்னர் ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பம் காரணமாக அந்த போட்டியில் இருந்து பின்வாங்கி விட்டார் அசோக் கெலாட்.

இன்று தான் காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனுத்தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால், ஏற்கனவே வேட்புமனு தாக்கல் படிவம் வாங்கி சென்ற காங்கிரஸ் எம்பி சசிதரூர், மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் திக் விஜயசிங் ஆகியோர் போட்டியிட உள்ளார் என கூறப்படுகிறது.

அதே போல, காங்கிரஸ் தலைவர் பதவிக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர், மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று வேட்புமனுத்தாக்கள் செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்தபோட்டி மும்முனை போட்டியாக உருவெடுத்துள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment