அதிமுகவை விட 2 மடங்கு அதிகமான வாக்குகளை பெற்ற காங்கிரஸ் வேட்பாளர்..!

21 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார். 

கடந்த மாதம் 27-ஆம் தேதி  ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைதேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள நிலையில், 15 சுற்றுகளாக எண்ணப்பட உள்ளது.

இரண்டு சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இரண்டு சுற்றுகளிலும் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் இருந்தார்.

21 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலை 

இதனை தொடர்ந்து மூன்றாவது சுற்று வாக்கு எண்ணிக்கையிலும் காங்கிரஸ் வேட்பாளர் முன்னிலையில் உள்ளார். அதன்படி, காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 31 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்று,  அதிமுகவை விட 2 மடங்கு அதிகமான வாக்குகளை பெற்றுள்ளார். அதிமுக வேட்பாளர், 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ளார். 21 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் உள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment