சட்டப்பேரவையில் விஜயகாந்த் மறைவிற்கு இரங்கல் தீர்மானம்..!

நடப்பு ஆண்டுக்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்றுதமிழக ஆளுநர் ஆர்.என் ரவி உரையுடன் தொடங்கியது. அரசு தயாரித்த உரையை முழுமையாக படிக்காமல் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி புறக்கணித்தார். இதன்பின் அரசு தயாரித்த உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு சட்டப்பேரவையில் வாசித்தார். இதைத்தொடர்ந்து,  சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டு அலுவல் ஆய்வு  கூட்டம் நடைபெற்றது.

பிப்ரவரி 22ம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் என சபாநாயகர் அபாவு தலைமையில் நடந்த அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.  இன்று  மற்றும் நாளை ஆகிய 2 நாட்கள் ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடைபெற உள்ளது. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவையின் 2-வது நாள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. சபை கூடியதும் சபாநாயகர் அப்பாவு, மறைந்த முக்கிய பிரமுகர்களுக்கு இரங்கல் தீர்மானம் வாசித்தார்.

ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை..!

அதன்படி  இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் எஸ் வெங்கிடரமணன், புகழ்பெற்ற கண் மருத்துவர் எஸ்.எஸ்.பத்ரிநாத், தமிழக முன்னாள் ஆளுநர் பாத்திமா பீவி, தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும், ஓடிசா மாநில முன்னாள் ஆளுநருமான எம்.எம்.ராஜேந்திரன் மற்றும் தேமுதிக தலைவரும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் ஆகியோரின் மறைவு குறித்து இரங்கல் தீர்மானங்களை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

இதைத் தொடர்ந்து மறைந்த சட்டமன்ற பேரவை முன்னாள் உறுப்பினர்கள் வடிவேலு, தெய்வநாயகம், தங்கவேல், துரை ராமசாமி, கு.க.செல்வம், எஸ்.ராஜசேகரன் உள்ளிட்டோரியின் மறைவிற்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.  மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுனம் கடைபிடித்தனர்.

author avatar
murugan

Leave a Comment