ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் இன்று பேச்சுவார்த்தை..!

ஜனவரி 7ஆம் தேதி சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில அலுவலகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் உயர் மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில்பழைய டென்ஷன் திட்டம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி பழைய டென்ஷன் திட்டம் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளனர். இந்நிலையில், ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளுடன் தமிழக அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

சனாதனம் சர்ச்சை; இன்று பீகார் நீதிமன்றத்தில் ஆஜராவாரா அமைச்சர் உதயநிதி?

இந்த பேச்சுவார்த்தையில்அமைச்சர்கள் எ.வ.வேலு, முத்துசாமி, அன்பில் மகேஷ் ஆகியோர் ஜாக்டோ ஜியோ உயர்மட்டக் குழு உடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.

author avatar
murugan

Leave a Comment