மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

இந்தி திணிப்பு நடவடிக்கையை கண்டித்து மதிமுக சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம்.

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மதிமுக பொதுச் செயலாளர் வைக்கோ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தி திணிப்பு நடவடிக்கை தொடர்பாக மத்திய அமைச்சர் அமித் ஷாவை கண்டித்தும், அரசியலமைப்பு சட்டத்தின் 8வது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் அலுவல் மொழியாக அறிவிக்ககோரியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. மொழிக்கு நாங்கள் எதிரி அல்ல,மொழி திணிப்புக்கு தான் எதிரி, இந்தியை இங்கு திணிக்க நினைத்தால், வரலாறு திரும்பும் என எச்சரிக்கிறேன்.

இந்தி பேசினால் தான் முன்னேற்றம் என்றால் இந்தி மாநிலங்கள் ஏன் முன்னேறவில்லை என்ற அண்ணாவின் கருத்து இன்றும் பொருந்தும், எங்கள் இளைஞர்களின் முனேற்றத்திற்கான வழிப்பாதை ஆங்கிலம்தான் என மதிமுக தலைமை கழக செயலாளர் துரை வைகோ ஆர்ப்பாட்டத்தில் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதிமுக துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, தலைமை கழக செயலாளர் துரை வைகோ மற்றும் மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் என 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment