பிரபல நடிகரின் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பாரா.?

விஜய் சாரை வைத்து படம் செய்வேன் என்று கூறியுள்ளார். இவரது படத்திற்கு தளபதி ஒகே சொல்வாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் விஜய். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான அனைத்து படங்களும் அதிக அளவில் வசூலை பெற்றது மட்டுமில்லாமல் பிளாக் பஸ்டர் ஹிட்டுமானது. தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தை மாநகரம், கைதி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தின் கதாநாயகியாக மாளவிகா மோகன் நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி வில்லனாகவும் , சாந்தனு, ஆண்ட்ரியா, கௌரி கிஷன், தீனா, அர்ஜுன் தாஸ் ஆகியோர் முக்கிய  வேடங்களில் நடித்துள்ளனர்.   ஏப்ரல் மாதத்தில் திரைக்கு வரவிருந்த இந்த படம் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக  படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது விஜய் ரசிகர்கள் காத்திருக்கும் ஒரே விஷயம் இப்படத்தின் ரிலீஸ் மற்றும் டீசர் தான்.

இந்த நிலையில் தற்போது நடிகரும், இயக்குநருமான சசிகுமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் விஜய்யை வைத்து படம் இயக்குவதை குறித்து கூறியுள்ளார். அதில், ஏற்கனவே விஜய் சாரிடம் வரலாற்று கதை ஒன்றை கூறியிருந்தேன், அவருக்கும் பிடித்திருந்தது. ஆனால் அந்த படம் ஒரு பெரிய பட்ஜெட் படம் என்பதால் அப்போது பண்ண முடியவில்லை. ஆனால் கண்டிப்பாக விஜய் சாரை வைத்து படம் செய்வேன் என்று கூறியுள்ளார். இவரது படத்திற்கு தளபதி ஒகே சொல்வாரா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.