பச்சை மிளகாயின் 10 மருத்துவ குணங்கள் அறியலாம் வாருங்கள்!

உணவில் காரத்திற்காக பயன்படுத்தப்படக் கூடிய பச்சை மிளகாயில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா என நாமே வியக்கும் அளவுக்கு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. அவைகள் குறித்து அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

பச்சை மிளகாயின் நன்மைகள்

பச்சை மிளகாயில் விட்டமின் ஏ, சி, கே மற்றும் கேப்சைசின் எனும் சத்துக்கள் அதிகம் அடங்கி உள்ளது. இந்த சத்துக்கள் காரணமாக உணவில் காரத்திற்காக சேர்க்கப்படும் கூடிய இந்த பச்சை மிளகாய் கொழுப்புகளை கரைக்கும் தன்மை உடையதாக காணப்படுகிறது. பச்சை மிளகாயில் கொழுப்புகள் கம்மியாக இருப்பதுடன் கலோரிகளை குறைக்கும் தன்மையும் அதிகம் இருக்கிறது. மேலும் இந்த பச்சை மிளகாயை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளும் போது செரிமானம் வேகமாக நடை பெற உதவுவதுடன், செரிமான மண்டலத்தை பாதுகாக்கவும்  உதவுகிறது.

பச்சை மிளகாயில் ஆன்டி-பாக்டீரியல் குணங்கள் அதிகம் அடங்கியுள்ளதால் சருமத்தை தொற்று ஏற்படாமல் பாதுகாப்பதுடன் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது. இயற்கையாக இரும்புசத்து அதிகம் கொண்டுள்ள இந்த பச்சை மிளகாயை பெண்கள் தொடர்ந்து சாப்பிட்டு வருவது மிகவும் நல்லது. மாதவிடாய் மற்றும் கர்ப்ப கால நேரங்களிலும் இது பெண்களுக்கு மிகவும் உதவுகிறது. மேலும் இந்த பச்சை மிளகாயில் உள்ள விட்டமின் ஈ சத்து காரணமாக வறண்ட சருமம் எண்ணெய் சுரப்பி உடையதாக மாறுகிறது. விட்டமின் சி சத்து காரணமாக இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதில் தலைமுடி உதிர்வை தடுக்கும் தன்மையும் அடங்கி உள்ளது.

author avatar
Rebekal