ஆண்மை அதிகரிக்க உதவும் அத்திப்பழத்தின் அளவில்லா நன்மைகள் அறியலாம் வாருங்கள்!

பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாக இல்லை என்றாலும் பல நன்மைகள் கொண்டுள்ள அத்தி பழத்தின் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் குறித்து அறியலாம் வாருங்கள்.

அத்திப்பழத்தின் நன்மைகள்

வைட்டமின் சி, வைட்டமின் ஏ சத்து, மெக்னீசியம் சத்துக்கள் அதிக அளவில் அத்தி பழத்தில் காணப்படுகிறது. இந்த அத்திப்பழத்தை தொடர்ந்து உண்டு வரும் பொழுது மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு விரைவில் குணமடையும். மேலும் இதனுடைய பாலை வாய்ப்புண்ணில் தடவினால் வாய்ப்புண் முழுவதுமாக ஆறும். மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் இந்த அத்திப்பழத்தை தொடர்ந்து சாப்பிடும் பொழுது மலச்சிக்கல் பிரச்சனையில் இருந்து விடுதலை கிடைக்கும். மேலும் ஆண்மைத்தன்மை குறைவாக இருப்பவர்களும் இந்த அத்தி பழத்தை எடுத்துக்கொள்ளலாம். மேலும் இது எளிதில் ஜீரணமாவதாய் ஊக்குவிப்பதுடன், கல்லீரல் மண்ணீரல் போன்ற உள்ளுறுப்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் சுறுசுறுப்புடன் செயல்படவும் உதவுகிறது.

சிறுநீரக கல் அடைப்பு உள்ளவர்கள் அத்தி பழத்தை சாப்பிடும் பொழுது அந்த பிரச்சனைகளை சரி செய்கிறது. மேலும் தினசரி இரண்டு அத்திப்பழங்களை சாப்பிடுவதால் உடலில் ரத்த உற்பத்தி அதிகரிப்பதுடன் உடல் நன்கு வளர்ச்சி அடையும். உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் தினமும் 2 அத்திப்பழத்தை சேர்த்துக்கொள்ளலாம். மேலும் போதைப் பழக்கம் உடையவர்களுக்கும் இந்த அத்தி பழத்தை கொடுத்து வரும் பொழுது போதை பழக்கத்தால் ஏற்பட்ட கல்லீரல் வீக்கத்தையும் சரி செய்ய முடியும். இந்த அத்தி பழத்தில் புரோட்டீன், சர்க்கரை சத்து கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு அதிக அளவில் இருப்பதால் மற்ற பழங்களைவிட அதிக அளவு சத்து கொண்டது. சீமை அத்திப்பழம் என்று கூறக்கூடிய அத்திப்பழம் வெண்குஷ்டத்தை குணமாக்குகிறது. மேலும் வெண்புள்ளி, தோலின் நிறமாற்றம் ஆகியவை குணமாக்கும் தன்மை கொண்டது.

author avatar
Rebekal