கல்லூரி மாணவிக்கு காதல் தொல்லை - உதவி பொறியாளர் கைது!

கல்லூரி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்துவந்த சென்னையை சேர்ந்த உதவி

By Rebekal | Published: Jul 11, 2020 08:50 AM

கல்லூரி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்துவந்த சென்னையை சேர்ந்த உதவி பொறியாளர் மேல் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உலகம் முழுவதிலும் கொரோனா வைரசுக்கு எதிராக சென்னையில் உள்ள கல்லூரி மாணவர்கள் சிலர் தன்னார்வலராக பனி புரிந்து வருகின்றனர். இந்நிலையில், இந்த தன்னார்வ பணிகளில் ஒன்றான வீடு வீடாக சென்று காய்ச்சல் உள்ளதா என சோதனை செய்து வந்தவர் தான் 19 வயதுள்ள மாணவி ஒருவர்.

இவருக்கு அதே பகுதியில் மாநகராட்சி உதவி பொறியாளராக பனி புரியும் கமலக்கண்ணன் என்பவர் தோலை பேசி மூலமாக காதலிக்க சொல்லி கூறியதாகவும், பின் தவறான முறையில் பேசியதாகவும் ஒரு ஆடியோ வெளியாகியுள்ளது.

இந்நிலையில், கமலக்கண்ணன் மீது பாலியல் தொந்தரவு மற்றும் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர் தலைமறைவாகியுள்ளதால் 2 தனிப்படை அமைத்து தேடுதல் வேட்டையும் நடைபெறுகிறது என கூறப்பட்டுள்ளது.

Step2: Place in ads Display sections

unicc