38 C
Chennai
Sunday, June 4, 2023

WTCFinal2023 : இதே மைதானத்தில் கடைசியாக ‘ஹிட்மேன் ‘செய்த தரமான சம்பவம்…ட்ரெண்ட் ஆகும் வீடியோ.!!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் (ஜூன்) 7-ஆம்...

அயர்லாந்துக்கு எதிராக இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் படைத்த வினோத சாதனை.!

அயர்லாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பேட்டிங், பவுலிங், விக்கெட்...

புதுச்சேரியில் வெயில் அதிகரிக்கும்…மிதமான மழை பெய்யும்…சென்னை வானிலை மையம் எச்சரிக்கை.!!

புதுச்சேரியில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், வெப்ப...

கல்வி சான்றிதழை நிறுத்திவைக்க கல்லூரி நிர்வாகங்களுக்கு உரிமை இல்லை – உயர் நீதிமன்ற கிளை

கற்றதற்காக மாணவர்களுக்கு தரப்படும் சான்றிதழ்கள் மீது யாரும் உரிமை கோர முடியாது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.

மாணவர்களின் கல்வி சான்றிதழை நிறுத்திவைக்க கல்லூரி நிர்வாகங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று உயர்நீதிமன்றம் மதுரை கிளை தெரிவித்துள்ளது. கட்டணம் தரவில்லை என்பதற்காக சான்றிதழ்களை நிறுத்திவைக்க கல்லூரி நிர்வாகம் வட்டி தொழில் ஏதும் செய்யவில்லை எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டது.

எனவே, கற்றதற்காக மாணவர்களுக்கு தரப்படும் சான்றிதழ்கள் மீது யாரும் உரிமை கோர முடியாது என கூறி, தென்காசி வாசுதேவநல்லூரில் உள்ள வேளாண் கல்லூரியில் படிப்பை இடைநிறுத்தம் செய்த மாணவியின் சான்றிதழை 10 நாட்களில் வழங்க கல்லூரி நிர்வாகத்துக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மேலும், இடைநிற்றல் கட்டணத்தை வசூலிக்க சட்ட நடவடிக்கைய கல்லூரி நிர்வாகம் மேற்கொள்ளலாம் எனவும் கூறியுள்ளனர். இடைநிற்றல் கட்டணம் செலுத்தாதற்காக வேளாண் கல்லூரி சான்றிதழை பிடித்து வைத்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.