கேப்டன் தோனிக்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் ரசிகர்களாக இருப்பது நமக்கு தெரிந்த ஒன்றுதான். அவரிடம் பலரும் ஆட்டோகிராப் வாங்குவது அவரிடம் சில விஷயங்களை கற்பது என பல நெகிழ்ச்சியான சம்பவங்களை பார்த்திருக்கிறோம்.
அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடும்போது போட்டி முடிந்த பின் தோனியை சந்தித்து தன்னுடைய டிசர்ட்-டில் சுனில் கவாஸ்கர் ஆட்டோகிராஃப் வாங்கி சென்றார்.

இத்தொடர்பான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதனையடுத்து, சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நடத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சுனில் கவாஸ்கர் தோனியிடம் எதற்காக ஆட்டோகிராப் வாங்குனீர்கள் என்ற கேள்விக்கு பதில் அளித்தார்.
Legend #SunilGavaskar reveals why Thala Dhoni’s autograph will be ♾ treasured.
The Little Master remembers two of #TeamIndia‘s most iconic moments ft. @msdhoni & @therealkapildev that he will cherish forever! 💯
Tune-in to more heartfelt content at #IPLonStar. #BetterTogether pic.twitter.com/QM2ozYZTJO— Star Sports (@StarSportsIndia) May 16, 2023
இது குறித்து பேசிய கவாஸ்கர் “எம்.எஸ் தோனியை நான் பார்த்ததும் அந்த தருணத்தை சிறப்பு வாய்ந்தத தருணமாக மாற்ற முடிவு செய்தேன். அதனால்தான் நான் அவரது ஆட்டோகிராப் வாங்க அவரிடம் சென்றேன். சேப்பாக்கத்தில் இது அவரது கடைசி ஹோம் கேம். நிச்சயமாக அவருக்கு சென்னையில் விளையாட வாய்ப்பு கிடைக்கும், இங்கே சென்னை பிளேஆஃப்களுக்கு தகுதி பெற்றால். ஆனால் அதற்கு முன்னதாக நான் அந்த தருணத்தை சிறப்பானதாக மாற்ற முடிவு செய்து அவரிடம் ஆட்டோகிராப் வங்கினேன். நல்ல வேலை கேமரா யூனிட்டில் உள்ள ஒருவரிடம் மார்க்கர் பேனா இருந்தது எனது அதிர்ஷ்டம். அதனால், அந்த நபருக்கும் நான் நன்றி கூறுகிறேன்” என கூறியுள்ளார்.