கல்லூரி இறுதி ஆண்டு தேர்வுகள் கட்டாயம் நடத்த வேண்டும்- யுஜிசி வாதம்.!

கல்லூரி இறுதி ஆண்டு தேர்வுகளை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்ற யுஜிசி அறிவித்தது. இந்த அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட நாடு முழுவதும் 31 மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு  தொடர்ந்தனர். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று வந்தது.

அப்போது, கல்லூரி இறுதியாண்டு தேர்வுகள் தொடர்பாக மாநில அரசுகள் முடிவு எடுக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் பல்கலைக்கழக மானிய குழு வாதிட்டது. மாநில அரசுகளின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க முடியாது எனவும், இறுதித்தேர்வு கட்டாயம் நடத்தப்பட வேண்டும், தேர்வு எழுதாத மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கபடாது என யுஜிசி தெரிவித்தது.

 மேலும், மகாராஷ்டிரா,  டெல்லி உள்ளிட்ட மாநில அரசுகள் விதிமுறைகளை மீறி தானாக  தேர்வுகளை ஒத்திவைத்துள்ளன, விதி மீறல் குறித்து விசாரிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்.

author avatar
murugan