மாணவர்களுக்காக புதிய ஐடியாவை அறிமுகப்படுத்திய கலெக்டர்.!

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு ஆன்லைன் என்ற ஒரு தேர்வு திட்டத்தை தொடங்கி உள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகள், பொதுமக்கள் கூடம் இடங்கள் உள்ளிட்டவை  அனைத்தும் மூடப்பட்டு உள்ளது.

இதனால், பள்ளி  மாணவர்கள் அனைவரும் வீட்டில் உள்ளார். இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கு பயனத்தரும் விதமாக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் சிறப்பு ஆன்லைன் என்ற ஒரு தேர்வு திட்டத்தை தொடங்கி உள்ளார்.

இதில், முதல் கட்டமாக 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும். இதில் பள்ளி தொடர்பான கேள்விகள் இடம்பெறும், இரண்டாம் கட்டமாக பள்ளி பாடங்கள் மற்றும் பொது அறிவு தொடர்பான கேள்விகள் கேட்கப்படும். இதில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ஊரடங்கு  முடிந்த உடன் மூன்றாம் கட்டமாக வினாடி-வினா தேர்வு நடத்தப்படும்.

இந்த தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். வரும் புதன்கிழமை ஆன்லைன் தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை மாணவர்கள் கலந்து கொள்ளலாம்.

புதன்கிழமை காலை 10 மணி முதல் 5 மணி வரை அவர்கள் தன் வீட்டிலிருந்து http://tiruvannamalai.nic  என்ற இணையதளத்தில் student online test இணைப்பை கிளிக் செய்து தேர்வு பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
murugan