டி 20  கிரிக்கெட்டில் உலக சாதனை படைத்த காலின் அக்கர்மேன்!

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் கவுண்டி டி 20  கிரிக்கெட் தொடரில் லீசெஷ்டர் -பர்மிங்காம்  பீர்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் களமிறங்கிய  லீசெஷ்டர்  அணி 6 விக்கெட் இழந்து 189 ரன்கள் எடுத்தனர்.பின்னர் 190 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய பர்மிங்காம்  பீர்ஸ் அணி 134 ரன்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

லீசெஷ்டர்  அணியை சார்ந்த தென்னாபிரிக்கா  பகுதிநேர சுழல்பந்து வீச்சாளர் காலின் அக்கர்மேன் 4 ஓவர் வீசி  18 ரன்கள் கொடுத்து 7 விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் டி20 போட்டிகளில் 7 விக்கெட்டை பறித்த முதல் வீரர் என்ற உலக சாதனை படைத்துள்ளார்.

இதற்கு முன் கடந்த 11 ஆம் ஆண்டு  சோமர்செட் அணிக்காக களம் இறங்கிய மலேசியாவைச் சார்ந்த அருள்  சுப்பையா 5 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை வீழ்த்தியது சாதனையாக இருந்தது.  டி 20 போட்டிகளில் 30-க்கும் மேற்பட்ட பந்துவீச்சாளர்கள் 6 விக்கெட் வீழ்த்தி உள்ளனர். ஆனால் 7 விக்கெட் வீழ்த்தியது இதுவே முதல் முறை.

author avatar
murugan