ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிப்ரவரி 28-இல் விண்ணில் பாயவுள்ள கோவை மாணவர்களின் செயற்கைக்கோள்!

பிப்ரவரி 28ஆம் தேதி கோவை தனியார் கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து வடிவமைத்த 460 கிராம் மட்டுமே கொண்ட செயற்கைக்கோள் விண்ணில் பாய உள்ளது.

கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப தனியார் கல்லூரியின் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து வடிவமைத்த460 கிராம் மட்டுமே எடை கொண்ட செயற்கைக்கோள் பிப்ரவரி 28ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் ஏவப்பட உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவப்பட்டவுள்ள  இந்த மாணவர்களின் தயாரிப்பான செயற்கைக்கோளுக்கு ஸ்ரீசக்தி ஷார்ட என பெயரிடப்பட்டுள்ளது. இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சியாளர்களின் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோள் 6 மாதங்கள் விண்ணில் சுற்றும் எனவும் கூறப்பட்டுள்ளது.

satellite

இது பைப் மூலம் செல்லக்கூடிய தண்ணீர், எரிவாயு கசிவு, எண்ணெய் ஆகியவற்றைக் குறித்து கண்டறிய உதவுவதுடன், அடுக்குமாடி குடியிருப்புகள் குறித்த கண்காணிப்பு பணிகளுக்கும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து பிப்ரவரி 28ஆம் தேதி ஏற்படவுள்ள மாணவர்களின் தயாரிப்பான இந்த செயற்கைக்கோளை கண்டறிந்த மாணவர்களுக்கு இஸ்ரோ தலைவர் சிவன் அவர்களும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal