கோவை கார் வெடிப்பு.! ஜமாத் அமைப்புகளுக்கு முக்கியமான வேண்டுகோள் வைத்த மாவட்ட ஆட்சியர்.!

அசம்பாவிதங்கள் நடைபெறப்போவது குறித்து ஏதேனும் தகவல் முன்கூட்டியே தெரிந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது. – கோவை மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள். 

கோவையில் கடந்த 23ஆம் தேதி நிகழ்ந்து கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷ் முபின் என்பவர் உயிரிழந்தார். பின்னர் நடந்த விசாரணையில் முதற்கட்டமாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணையை தமிழக காவல்துறை மேற்கொண்டு வந்த நிலையில், தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ அமைப்பு விசாரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார்.

இதனை தொடர்ந்து, கோவையில் உள்ள அனைத்து ஜமாத் அமைப்புகளுடன் (இஸ்லாமிய மத அமைப்பு) மாவட்ட ஆட்சியர் சமீரான் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தை பற்றி மாவட்ட ஆட்சியர் கூறுகையில், ‘ இந்த மாதிரி அசம்பாவிதங்கள் நடைபெறப்போவது குறித்து ஏதேனும் தகவல் முன்கூட்டியே தெரிந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல் துறைக்கும் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.’ என செய்தியாளர்களிடம் ஆட்சியர் தெரிவித்தார்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment