கடலுக்குள் பதுக்கிய தங்க பிஸ்கெட்டுகளை கண்டுபிடித்த கடலோர காவல்படை.!

ராமேஸ்வரம் அருகே கடலுக்குள் பதுக்கி வைக்கப்பட்ட ரூ.7 கோடி மதிப்புடைய சுமார் 17 கிலோ தங்கம் கண்டுபிடித்து பறிமுதல் செய்யப்பட்டது. இதனிடையே மண்டபம் மரைக்காயர் பட்டினத்தைச் சேர்ந்த ஆஷிக் மற்றும் பாரூக்கும்  முயல்தீவு அருகே கடல்பகுதியில் இருந்தபோது இந்திய கடலோர காவல்படையினர் அவர்களை பிடித்தனர். பின்னர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இலங்கையிலிருந்து கடத்தி கொண்டுவரப்பட்ட தங்க பிஸ்கெட்டுகளை பொட்டலமாக கட்டி முயல் தீவு அருகே கடலுக்குள் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து நீச்சல் வீரர்கள் துணையுடன் தங்க பிஸ்கெட்டுகளை கண்டுபிடித்து கடலோர காவல்படையினர் பறிமுதல் செய்தனர். மேலும் பிடிபட்ட 2 பேரையும் கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்