“உயிருள்ள கோழிகளை டெல்லிக்கு கொண்டுவர தடை”- முதல்வர் அதிரடி உத்தரவு!

பறவைக்காய்ச்சல் எதிரொலி காரணமாக டெல்லி மாநிலத்திற்குள் உயிருடன் இருக்கும் கோழி மற்றும் பறவைகளை கொண்டுவர தடை விதித்து, அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கேரளா உட்பட சில மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் தீவிரமாக பரவிவரும் நிலையில், பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இருந்து கோழி இறக்குமதிக்கு தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பறவை காய்ச்சல், இன்ஃப்ளூயன்ஸா வகை “A” வைரஸ்களால் ஏற்படும் வைரஸ் தொற்று நோயாகும். மேலும், பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், டெல்லி மாநிலத்திற்குள் அடுத்த 10 நாட்களுக்கு உயிருடன் இருக்கும் கோழி மற்றும் பறவைகளை கொண்டுவர தடை விதித்து, அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும், காசிப்பூரில் இருக்கும் மிகப்பெரிய இறைச்சி கூடங்களை மூடவும் அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.