இறைச்சி  விற்பனைக்கு தடை விதிக்க வேண்டாம்! மத்திய அரசு அறிவுறுத்தல்!

பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லாத மாநிலங்களில் இருந்து பெறப்படும் இறைச்சி  விற்பனைக்கு தடை விதிக்க வேண்டாம் என்று அம்மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.  கடந்த சில நாட்களாக பறவை காய்ச்சல் பரவி வரும் நிலையில், இந்தியாவில் பல மாநிலங்களில் இந்த காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த காய்ச்சல் பரவாமல் இருக்க பிற பகுதிகளில் இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பறவைக் காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் மீன்வளம் மற்றும் கால்நடை பராமரிப்பு மற்றும் பால் வளத்துறை அமைச்சகம்  அறிக்கையில் தெரிவித்துள்ளது. … Read more

வேகமாக பரவும் பறவைக் காய்ச்சல் ! இந்தியாவில் 9 மாநிலங்களில் பாதிப்பு உறுதி

டெல்லி மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேசம், கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஹரியானா மற்றும் குஜராத் ஆகிய 7 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது என மத்திய மீன்வளத்துறை, கால்நடை பராமரிப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. டெல்லி, சண்டிகர் மற்றும் மகாராஷ்டிராவில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்படவில்லை என்றும், இந்த இடங்களிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் தேர்வுக்கு அனுப்பப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டது.நோய் மேலும் பரவாமல் தடுக்க … Read more

“உயிருள்ள கோழிகளை டெல்லிக்கு கொண்டுவர தடை”- முதல்வர் அதிரடி உத்தரவு!

பறவைக்காய்ச்சல் எதிரொலி காரணமாக டெல்லி மாநிலத்திற்குள் உயிருடன் இருக்கும் கோழி மற்றும் பறவைகளை கொண்டுவர தடை விதித்து, அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கேரளா உட்பட சில மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் தீவிரமாக பரவிவரும் நிலையில், பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இருந்து கோழி இறக்குமதிக்கு தடை செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பறவை காய்ச்சல், இன்ஃப்ளூயன்ஸா வகை “A” வைரஸ்களால் ஏற்படும் வைரஸ் தொற்று நோயாகும். மேலும், பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க பல முன்னெச்சரிக்கை … Read more

வேகமாக பரவும் பறவை காய்ச்சல் ! இந்தியாவில் இருந்து தடை விதித்த நேபாள அரசு

இந்தியாவின் 6 மாநிலங்களில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ள நிலையில் கோழி  இறைச்சி இறக்குமதிக்கு நேபாளம் தடை விதித்துள்ளது.  கேரளா, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், ஹிமாச்சல பிரதேசத்தில் பறவை காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் இருந்து கோழி உள்ளிட்ட பறவைகள் இறைச்சியை இறக்குமதி செய்ய நேபாளம் தடை விதித்துள்ளது. கோழித் தொழிலுக்கு முதன்மை சந்தையாக விளங்கும் இந்தியாவில் இருந்து கோழி உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்வதை நிறுத்துமாறு நேபாள விவசாய மற்றும் கால்நடை மேம்பாட்டு அமைச்சகம்  உத்தரவிட்டுள்ளது.அனைத்து உள்ளூர் அலுவலகங்கள் … Read more

பரவும் பறவைக்காய்ச்சல்: ஜான்சியில் உள்ள பள்ளியில் 4 காகங்கள் உயிரிழப்பு!

உத்தரபிரதேச மாநிலம், ஜான்சியில் உள்ள ஒரு பள்ளியில் நான்கு காகங்கள் உயிரிழந்த நிலையில், அது குளிர் காரணமாக உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இருந்து கோழி இறக்குமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும், பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த பறவை காய்ச்சல், இன்ஃப்ளூயன்ஸா வகை “A” வைரஸ்களால் ஏற்படும் … Read more

பறவை காய்ச்சல் : நோய் பரவுவதைக் கண்காணிக்க 12 சிறப்பு வழிகாட்டும் மையங்கள் – மத்திய சுகாதாரத்துறை

மத்திய சுகாதாரத்துறை, பறவைக் காய்ச்சல் நோய் பரவுவதைக் கண்காணிக்க 12 சிறப்பு வழிகாட்டும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.  ராஜஸ்தான், மத்திய பிரதேசம், இமாசல பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்ட மாநிலங்களில் இருந்து கோழி இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நோயானது தொடர்ந்து பராவால் தடுக்க அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை,  பறவைக் காய்ச்சல் நோய் பரவுவதைக் கண்காணிக்க 12 சிறப்பு வழிகாட்டும் … Read more

இமாச்சல பிரதேசத்தில் பறவைக் காய்ச்சல் – 1,800 பறவைகள் பலி!

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களை தொடர்ந்து இமாச்சல பிரதேசத்தில் பறவை காய்ச்சல் பரவி உள்ளது. கடந்த சில நாட்களாக கேரளாவில் பறவைக் காய்ச்சல் பல மாவட்டங்களுக்கு பரவிவரும் நிலையில், அதனை மாநில பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ளது. கோட்டயம் மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களின் இறந்த வாத்துகளின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்ட போது பறவைக் காய்ச்சல் பரவி வருவது கண்டறியப்பட்டது. இருப்பினும், இந்த நோய் மக்களுக்கு பரவவில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ஒரு பண்ணையில் சுமார் 1,650 வாத்துகள் … Read more