விடுமுறையில் வகுப்புகள் நடத்தப்படக்கூடாது – மீறினால் கடும் நடவடிக்கை!

விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நாட்களில் வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு.

கொரோனா வைரஸின் தாக்குதல் கடந்த சில மாதங்களாக உலகம் முழுவதிலும் பெருந்தொற்றாக பரவி வருகிறது. இதுவரை மூன்று கோடிக்கும் அதிகமானோர் உலகம் முழுவதிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தமிழகத்திலும் கொரானாவின் பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே தான் செல்கிறது, இருப்பினும் மாணவர்களின் படிப்புக்காக ஆசிரியர்கள் ஆன்லைன் மூலமாக பாடங்களை கற்பித்து வருகின்றனர். 1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முதல் பருவம் முடிவடைய கூடிய காலகட்டம் இது. இதனால் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறைகள் தொடங்கப்பட்டுள்ளதாக பள்ளி கல்வித்துறை அறிவித்தது.

அதாவது 21 ஆம் தேதி முதல் 25-ம் தேதி வரை மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்த கூடாது எனவும் இது அவர்களின் காலாண்டு விடுமுறை எனவும், இது மாணவர்களின்மனஅழுத்தத்தை போக்கும் எனவும் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மீறி விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal