நாளை வெளியாகிறது 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

நாளை வெளியாகிறது 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது.

இது தொடர்பாக பள்ளி கல்வித்துறை சார்பாக வெளியிட்ட அறிவிப்பில்,10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை   வெளியிடப்படும். மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை இணையதளங்கள் வழியாக அறிந்து கொள்ளலாம். நாளை காலை 9.30 மணிக்கு https://tnresults.nic.inhttps://dge1.tn.nic.in,   https://dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களிலும், SMS மூலமாகவும் தேர்வு முடிவுகள் வெளியாகிறது.

இந்த ஆண்டு பள்ளி அளவில் நடைபெற்ற தேர்வுகளின் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படுவதால் வழக்கமாக வழங்கப்படும் மறுகூட்டல் வாய்ப்பிற்குப் பதிலாக ,மாணவர்கள் தங்களுக்கு மதிப்பெண் சார்ந்த குறைகள் ஏதேனும் இருப்பின் வருகின்ற 17 ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரையிலான நாட்களில் பயின்ற பள்ளியின் வாயிலாக அரசுத் தேர்வுத்துறை படிவத்தினை பூர்த்தி செய்து, பள்ளித் தலைமையாசிரியர் வாயிலாக அரசுத் தேர்வுத் துறை இணைய தளம் ( http://www.dge.tn.gov.in/) மூலம் விண்ணப்பிக்கலாம்.மாணவர்கள் கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் வாயிலாக முடிவுகள் மாணவர்களுக்கு தெரிவிக்கப்படும்.

என்றும் ஆகஸ்ட் 17 முதல் முதல் 25-ஆம் தேதி வரை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் மதிப்பெண் சான்றிதழை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Posts

15 வருடங்களுக்கு பிறகு அஜித்துடன் இணையும் ஜிவி பிரகாஷ்...!
செல்வன் கொலை வழக்கு ! அதிமுகவின்  அனைத்து பொறுப்புகளில் இருந்து திருமணவேல் நீக்கம் - அதிமுக உத்தரவு
சுய உதவிக்குழுக்களை மேம்படுத்துவதற்காக ரூ.200 கோடி கடன் தொகை - மத்திய பிரதேச முதல்வர்
புதுச்சேரி பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகள் தொடங்கியது.!
விமான பயணம் துவங்கினாலும் தென் ஆப்பிரிக்கா தங்கள் நாட்டில் இந்தியர்களை அனுமதிக்காது!
#BREAKING: தூத்துக்குடி இளைஞர் கொலை வழக்கு - சிபிசிஐடிக்கு மாற்றம்.!
அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணி துவக்கம்..!
3,501 நகரும் நியாய விலைக் கடைகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி
சூரியின் அடுத்த படத்திற்காக அவர் கெட்டப்பை பார்த்தீர்களா..?
லடாக்கில் பதற்றம்: ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான 6ம் கட்ட பேச்சுவார்த்தை.!