கிறிஸ்துமஸ் விழாவை மகிழ்ச்சியோடு இனிமையாக கொண்டாட கிறிஸ்துமஸ் கேக்…..!!!!

கிறிஸ்துமஸ் விழாவை அனைவரும் பல இனிப்பான பலகாரங்களை செய்து மகிழ்ச்சியோடு கொண்டாடுவர். ஒவ்வொரு வருடமும் செய்த பலகாரத்தையே செய்து வந்தால் அறையா நாள் விசேஷமாக இருக்காது. ஏதாவது புதிதாக செய்தால் தான் விழா களைகட்டும். அதிலும் சிலர் கேக் என்றால் பேக்கரியில் தான் வாங்க வேண்டும் என்று அல்ல, நாமும் கூட செய்யலாம்.

தேவையான பொருட்கள் :

  • மைதா – 300 கிராம்
  • சர்க்கரை – 250 கிராம்
  • முட்டை – 4
  • பாக்கிங் பவுடர் – 1 கிராம்
  • பட்டர் – 150 கிராம்
  • ரூட்டி ப்ரூடி – தேவைக்கேற்ப
  • திராட்சை – தேவைக்கேற்ப
  • வென்னிலா கலர் – தேவைக்கேற்ப
  • முந்திரி – 50 கிராம்
  • செரி – 50 கிராம்
  • வால்நட் – 50 கிராம்

செய்முறை :
ஒரு பாத்திரத்தில் மைதாவை தெளித்து எடுத்து கொள்ள வேண்டும். மாவுடன் திராட்சை முத்திரை ஆகியவற்றை சிறிதாக வெட்டி சேர்த்து கொள்ள வேண்டும். வெண்ணிலா கலருடன் உருகிய பட்டர் மற்றும் சர்க்கரை சேர்த்து கொள்ள வேண்டும். பின் முட்டை சேர்த்து நன்றாக கலக்கி கொள்ள வேண்டும். இந்த கலவையை எடுத்து மைக்ரோ அவன் பாத்திரத்தில் 120 டிகிரி சூட்டில் வைக்க வேண்டும். அதன் பின் நமக்கு தேவையான கிறிஸ்துமஸ் கேக் தயாராகி விடும்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment