சின்ன மச்சான் பாடலுக்கு இவ்வளோ வரவேற்பா…?

சூப்பர் சிங்கர் டைட்டில் வின்னர் செந்தில் கணேஷ், ராஜலக்ஷ்மி பாடிய பாடல் தான் சின்ன மச்சான். இந்த சீசன் சூப்பர் சங்கரின் ட்ரெண்டிங்கான பாடல் இது தான்.

இதன் மூலம் அவர்கள் பிரபலமானார்கள் என்று கூட சொல்லலாம். இந்த பாடலின் உரிமத்தை பெற்ற பிரபுதேவா நடிக்கும் சார்லி சாப்ளின்-2 படக்குழு இந்த பாடலை படத்தில் வைத்துவிட்டது.

கூடுதலாக அமரீஷின் இசை சேர்க்கப்பட்ட இந்த பாடல் யூடியூபில் இதுவரை 7 மில்லியன் பார்வையாளர்களை நெருங்கி சென்று கொண்டிருக்கிறது.

அப்படியே காப்பி பாடல், நாட்டுப்புற பாடல் என சில நெகட்டிவ் கமெண்ட்களை பெற்றாலும் இந்த வளர்ச்சியை இந்த பாடல் மிக விரைவில் பெற்றுவிட்டது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment