தஜிகிஸ்தானில் சீன, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்திப்பு…!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற சீன மற்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்தித்து பேசியுள்ளனர்.

2001-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்நிலையில் இந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 21-வது ஆண்டு கூட்டம் இன்று நடைபெற உள்ள நிலையில், கஜகஸ்தான் நாட்டின் தலைநகர் துஷன்பேவிற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் சென்றுள்ளார்.

மேலும், இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக சில முக்கிய அதிகாரிகளும் சென்றுள்ளனர். இந்த கூட்டத்தின் போது சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீயை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது, இந்திய சீன எல்லைப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள படைகளை முழுமையாகத் திரும்பப் பெறுவது குறித்து விவாதித்ததாகவும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவு மேம்பட வேண்டுமானால் எல்லையில் மீண்டும் அமைதி ஏற்பட வேண்டியது முக்கியம். எனவே எல்லையில் உள்ள படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி உள்ளதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

author avatar
Rebekal