புதிய செயற்கை கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய சீனா!

சீனா புதிய ஆப்டிகல் ரிமோட் சென்சிங் செயற்கை கோளை நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

சீனா தனது புதிய ஆப்டிகல் ரிமோட் சென்சிங் கொண்ட செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள ஜியுவான் ஏவுதளத்திலிருந்து உள்ளூர் நேரப்படி 10:27 க்கு செயற்கைக்கோளை சீனா விண்ணில் ஏவியுள்ளது. ஏற்கனவே காபன்9 05 என்ற செயற்கைகோள் கடந்த மார்ச் மாதம் விண்ணில் ஏவப்பட்டு, வெற்றிகரமாக புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக சீன அதிகாரிகள் தெரிவித்தனர்.

நில அளவீடுகள், நகரத் திட்டமிடல், சாலைகள் வடிவமைப்பு, பயிர் விளைச்சல் மதிப்பீடு பேரழிவு தடுப்பு மற்றும் தணிப்பு நடவடிக்கைகளுக்கு தற்போது அனுப்பியுள்ள இந்த செயற்கைகோள் பயன்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

author avatar
Rebekal