1992 க்கு பிறகு இந்த அளவு ஜிடிபி சரிவை சந்தித்த சீனா.! இதுவே முதல் முறை.!

சீனாவின் உள்நாட்டு மொத்தம் உற்பத்தி ஜிடிபி வளர்ச்சி விகிதம் 2020 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் 6.8% குறைவு.

சீனாவில் கோரத்தாண்டவம் ஆடிய கொரோனா வைரசால் பெரும் இழப்பீடை சந்தித்து தற்போது அந்நாட்டில் இயல்பு நிலை திரும்பி உள்ளது. அந்நாட்டில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டு, பின்னர் மூடப்பட்டிருந்த சிறு, குறு தொழில் நிறுவனங்கள் 84 சதவீதத்திற்கு மேல் தற்போது திறக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சீனாவின் உள்நாட்டு மொத்தம் உற்பத்தி ஜிடிபி (Gross domestic product) வளர்ச்சி விகிதம் 2020 ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் 6.8 சவிகிதம் குறைந்துள்ளதாக அந்நாட்டின் தேசிய புள்ளிவிவர பணியகம் தரவு கூறுகிறது. 1992க்கு பிறகு சீனாவில், முதல் காலாண்டில் இந்த அளவு ஜிடிபி குறைந்துள்ளது, இதுவே முதல் முறையாகும் என்று தெரிய வருகிறது.

சீனாவில் மொத்தம் உள்நாட்டு உற்பத்தி ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் 6.5 சவிகிதம் குறையும் என்று ஆய்வாளர்கள் கணித்திருந்தனர். ஆனால் கணிதத்தைவிட அதிக அளவு ஜிடிபி வளர்ச்சி விகிதம் சரிவை கண்டுள்ளது. இதற்கு முந்தைய 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் வரை சீனாவில் பொருளாதாரம் 6 சதவிகிதம் வளர்ச்சியடைந்தது. இதனிடையே கொரோனாவால் சீனாவில் 82,692 பேர் பாதிக்கப்பட்டு, 4,632 பேர் உயிரிழந்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்