உச்சம் தொட்ட இந்தியாவின் GDP வளர்ச்சி! மூன்றாம் காலாண்டில் 8.4 சதவீதம்

GDP: இந்தியாவின் GDP வளர்ச்சியானது மூன்றாம் காலாண்டில் 8.4% ஆக அதிகரித்துள்ளதாக அரசாங்க தரவுகள் தெரிவிக்கின்றன. அதன்படி தற்போதைய GDP வளர்ச்சியானது எதிர்பார்த்ததை விட அதிகமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. GDP (gross domestic product) என்பது குறிப்பிட்ட நிலப்பரப்பில் அல்லது நாட்டில் குறிப்பிட்ட கால இடைவெளியில் கணக்கிடப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஆகும். Read More – உரங்களுக்கு ரூ.24,420 கோடி மானியம் – மத்திய அமைச்சரவை ஒப்புதல் இதன் மூலம் ஒரு நாட்டின் பொருளாதாரம் கணக்கிடப்படுகிறது. … Read more

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை – RBI கவர்னர் சக்திகாந்த தாஸ்!

ரெப்போ (4%) மற்றும் ரிவர்ஸ்-ரெப்போ (3.35%) வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை என்று ரிசர்ச் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். வங்கிகளுக்கான குறுகியக் கால கடன் (ரெப்போ) வட்டி விகிதத்தில் (4%) மாற்றம் இல்லை என்று ரிசர்ச் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக,நிதிக் கொள்கைகளை வெளியிட்டு ஆர்பிஐ ஆளுநர் கூறியதாவது: “பணவியல் கொள்கைக் குழு (MPC) கொள்கை ரெப்போ விகிதத்தை 4% ஆக வைத்திருக்க ஒருமனதாக வாக்களித்தது.இதனால்,அதில் எந்தவித மாற்றமும் இல்லை.மேலும்,MSF … Read more

வரும் நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 11 %  இருக்கும் – ஆய்வறிக்கையில் தகவல்

நடப்பாண்டில் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி சதவீதம் 7.7 % இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2020 – 21 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றங்களின் இரு அவைகளிலும் தாக்கல் செய்தார். பின்னர் தலைமை பொருளாதார ஆலோசகர் சுப்ரமணியன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பொருளாதார ஆய்வறிக்கையை வெளியிட்டார்.அப்பொழுது அவர் பேசுகையில்,வரும் நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி 11 %  இருக்கும் என்று பொருளாதார ஆய்வறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.அந்த அறிக்கையில் ஒட்டுமொத்த ஏற்றுமதி மற்றும் அரசு பயன்பாடு … Read more

தங்க புதையல் கண்டுபிடிப்பு., உள்நாட்டு உற்பத்தி மதிப்பை விட அதிகம்.!

துருக்கியின் விவசாய கடன் கூட்டுறவுத் தலைவரான பஹ்ரெடின் பொய்ராஸ் மற்றும் உர உற்பத்தி நிறுவனமான குபெர்டாஸ் ஆகியோர் தங்க புதையலை கண்டுபிடித்துள்ளனர். துருக்கியில் மிகப் பெரிய தங்க புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தங்க புதையலின் எடை 99 டன் என்றும் தங்கத்தின் மதிப்பு ரூ.44,000 கோடி எனவும் கூறப்படுகிறது. உலகின் பல நாடுகளின், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை விட அதிகம் என்பது ஆச்சரியம். உர நிறுவனம் ஒன்று வாங்கிய நிலத்தில் இந்த தங்க புதையலை கண்டுபிடித்துள்ளனர். … Read more

மூன்றாம் காலாண்டில் மந்தநிலையிலிருந்து வெளியேறிய ஜப்பான்..!

ஜப்பானின் பொருளாதாரம் மூன்றாம் காலாண்டில் மந்தநிலையிலிருந்து வெளியேறியது, எதிர்பார்த்ததை விட 5.0 சதவீதத்தை விட அதிகமாக உயர்ந்துள்ளது, என்று  அரசு தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளது. ஜப்பானில் கொரோனா வைரஸ் மற்றும் வரி உயர்வு ஆகியவை இந்த ஆண்டின் தொடக்கத்தில் பொருளாதாரத்தை தலைகீழாக மாற்றிய பின்னர், உள்நாட்டு தேவை மற்றும் ஏற்றுமதிகள் காரணமாக  காலாண்டு காலாண்டு வளர்ச்சியை அதிகரிக்க உதவியது. ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையில், ஜப்பானில் பொருளாதார நடவடிக்கைகள் ஓரளவு இயல்பு நிலைக்கு … Read more

2-ம் காலாண்டில் 51% குறைந்த தென் ஆப்பிரிக்க பொருளாதாரம்..!

இரண்டாம் காலாண்டில் 51% சரிவை கண்ட தென் ஆப்பிரிக்க பொருளாதாரம். கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் முதல் பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக அனைத்து தொழில்களும், உற்பத்தியில் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன. பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் ஏற்றுமதி, இறக்குமதி மிகவும் பாத்திக்கப்பட்டது. இதனால், பல நாடுகளில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டில் தென் ஆப்பிரிக்காவின் இரண்டாம் காலாண்டின் ஜிடிபி உடன்  கடந்த ஆண்டை ஜிடிபி-யை ஒப்பிடுகையில் 51% … Read more

பொருளாதாரத்தின் மீது நடந்த 2வது பெரிய தாக்குதல் GST – ராகுல் காந்தி

பொருளாதாரத்தின் மீது நடந்த 2வது பெரிய தாக்குதல் GST  என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டுகலான ஏப்ரல் முதல் ஜூன் வரை உள்ள பொருளாதார அறிக்கையை தேசிய புள்ளியியல் அலுவலகம்   வெளியிட்டது. அதில் இதுவரை இல்லாத அளவாக, நாட்டின் ஜி.டி.பி. 23.9 சதவீதம் சரிந்துள்ளது என தெரிவித்தது.இது குறித்து நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் ஆளும் பாஜக அரசை விமர்சிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் … Read more

நடப்பாண்டில் அர்ஜென்டினாவின் ஜிடிபி 12 % வீழ்ச்சியடையும்-மத்திய வங்கி கணிப்பு.! 

கொரோனா வைரஸ்  காரணமாக 2020 ஆம் ஆண்டில் அர்ஜென்டினாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 12% வீழ்ச்சியடையும் என்று மத்திய வங்கி கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது கொரோனா வைரஸ் காரணமாக 2020 ஆம் ஆண்டில் அர்ஜென்டினாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 12% குறைய வாய்ப்புள்ளது என  அந்நாட்டு மத்திய வங்கி பொருளாதார வல்லுநர்களின் கணக்கெடுப்பின் படி தெரிவிக்கப்பட்டுள்ளது. அர்ஜென்டினா மத்திய வங்கி  நிபுணர்கள் நேற்று வெளியிட்ட ஆய்வில், முந்தைய மாதம் மதிப்பிடப்பட்ட ஜிடிபி 12.5% உடன் இந்த கணிப்பு … Read more

“ஜி.டி.பி. சரிவு.. மத்திய அரசுக்கு இது அவமானம்”- முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்!

சரியான நிதி மற்றும் மக்கள் சார்ந்த நடவடிக்கை எடுத்திருந்தால் மட்டுமே பொருளாதார வீழ்ச்சியை தவிர்த்திருக்க முடியும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டுகலான ஏப்ரல் முதல் ஜூன் வரை உள்ள பொருளாதார அறிக்கையை தேசிய புள்ளியியல் அலுவலகம் நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில் இதுவரை இல்லாத அளவாக, நாட்டின் ஜி.டி.பி. 23.9 சதவீதம் சரிந்துள்ளது என தெரிவித்துள்ளது. இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், சரியான நிதி மற்றும் மக்கள் … Read more

தொடர் ஊரடங்கு காரணமாக மொத்த உள்நாட்டு உற்பத்தி -23.9% சரிவு

2020-2021-ம் ஆண்டின் முதல் காலாண்டின் (ஏப்ரல் முதல் ஜூன்) ஜிடிபி எனப்படும் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை மத்திய புள்ளியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில், 2019-2020-ம் ஆண்டின் முதல் காலாண்டின் பதிவான 5.2 வளர்ச்சியுடன் ஒப்பிடும்போது , 2020-2021-ம் ஆண்டின் முதல் காலாண்டின் (ஏப்ரல் முதல் ஜூன்) உள்நாட்டு உற்பத்தி  வளர்ச்சி மைனஸ் 23.9 % விழுக்காடு சரிவை கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில்,வேளாண்துறையை தவிர  மற்ற அனைத்து துறைகளும் சரிவை கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது … Read more