அமெரிக்கா வல்லுநர்களை அனுமதித்த சீன அரசு.!

  • கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த, உலக சுகாதார நிறுவன குழுவின் அங்கமாக, அமெரிக்க வல்லுநர்களையும் அனுமதிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது.
  • கொரானா வைரஸ் தொடர்பாக ஆய்வு செய்யவும், வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தவும், உலக சுகாதார நிறுவனத்தின் குழு சீனா செல்கிறது.

கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த, உலக சுகாதார நிறுவன குழுவின் அங்கமாக இருக்கும், அமெரிக்க வல்லுநர்களையும் அனுமதிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது. சீனாவில் பரவி வரும் கொரோனா வைரசால், தொழில், வர்த்தகம் பாதிக்கப்பட்டு பங்குசந்தைகளின் கடும் சரிவை சந்தித்து வருகின்றன. இதனிடையே சீன தொடர்பாக தேவையற்ற பயண கட்டுப்பாடுகளை முதலில் விதித்தது. பின்னர் தங்கள் நாட்டில் இருப்பவரை முதன் முதலில் மீட்டு சென்றது ஆகியவற்றின் மூலம் அமெரிக்கா தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தி பரப்புவதாக சீன அரசு குற்றம்சாட்டத்தினர்.

இந்நிலையில், கொரானா வைரஸ் தொடர்பாக ஆய்வு செய்யவும், வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தவும், உலக சுகாதார நிறுவனத்தின் குழு சீனா செல்கிறது. இந்த குழுவில் அமெரிக்க வல்லுநர்கள் இடம்பெறுவதாகவும், இதற்கு சீனா ஒப்புதல் அளித்துள்ளதாகவும், வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. இதனிடையே சீனாவில் உள்ள வுகான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது வரை கொரோனா வைரஸ் பெய்ஜிங், ஷாங்காய், ஹூபே போன்ற பல நகரங்களில் பரவுள்ளது. கொரோனா வைரசால் பலியானோர்களின் எண்ணிக்கை 425 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல இந்த வைரசால் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளதாக சீனா அரசு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்