குழந்தையின் உடலை அட்டைப் பெட்டியில் வைத்து வழங்கிய விவகாரம் – விசாரணை குழு அமைப்பு

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த தம்பதிமசூத் – சௌமியா. இவர்கள் மிக்ஜாம் பாதிப்பின் போது கடந்த 6-ஆம் தேதி சௌமியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்ட நிலையில், அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக அவரது கணவன் மற்றும் உறவினர்கள் அழைத்து சென்றனர்.

அவரை ஆம்புலன்ஸ் உதவியுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சௌமியாவுக்கு குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. மருத்துவமனையின் பிணவறை பணியாளர்கள் இறந்த குழந்தையை துணி சுற்றாமல் அட்டைப்பெட்டியில் மட்டும் வைத்து கொடுத்துள்ளனர்.

விஜயகாந்த் தலைமையில் வரும் 14ம் தேதி தேமுதிக நிர்வாகிகள் கூட்டம்!

இந்த நிலையில், குழந்தையின் தந்தை, இறந்த குழந்தையை  அட்டைப்பெட்டியில் வைத்து எடுத்து வரும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தது. இந்த செயலுக்கு கண்டனங்கள் வலுத்து  வருகிறது.

இதுகுறித்து குழந்தையின் தந்தை கூறுகையில்,  இந்த நிலையில் பிணவறை பணியாளர் பன்னீர் செல்வத்தை பணிநீக்கம் செய்து மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ள விசாரணை குழு ஒன்றையும் அமைத்துள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.