2023ல் சந்திரயான்-3 தான் முதலிடம்… கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் லிஸ்ட் வெளியீடு!

இந்தியா மட்டுமில்லாமல் உலகமே எதிர்பார்த்து காத்திருந்த இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை 14 தேதி ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இதையடுத்து, கடந்த ஆக.23ம் தேதி, சந்திரயான்-3 விண்கலத்தின் பிரக்ஞான் ரோவர் நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக தரை இறங்கி ஆய்வு மேற்கொண்டது.

விக்ரம் லேண்டரில் இருந்த வெளிவந்த பிரக்யான் ரோவர் தனது ஆய்வு பயணத்தை தொடங்கி பல தகவலை பூமிக்கு அனுப்பியது. இந்த நிகழ்வு ஒரு வரலாற்று சாதனையாக அமைந்தது. நிலவில் வெற்றிகரமாக விண்கலத்தை தரையிறங்கிய பட்டியலில் இந்தியா தனது பெயரை பொறித்தது. அதுமட்டுமில்லாமல், நிலவின் தென் துருவத்தில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் நாடு என்ற பெருமையையும் இந்தியா அடைந்தது.

இந்த சந்திரயான் – 3 விண்கலத்தின், ‘லேண்டர் மற்றும் ரோவர்’ கருவிகளை ஏந்தி சென்ற, ‘ப்ரொபல்ஷன் மாட்யூல்’ எனப்படும் உந்துவிசை கலன் நிலவின் சுற்றுவட்ட பாதையில் சுற்றி வந்து கொண்டிருந்தது. இந்தியா எதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியதோ, அது வெற்றிகரமாக முடிவடைந்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விண்ணில் ஏவப்பட்டு, வெற்றி பெற்ற சந்திரயான்-3 இந்த வருடம் உலக முழுவதும் பேசப்பட்டது.

AI மூலம் உங்களுக்கு பிடித்தவர்களுடன் பேசலாம்.! எப்படினு பாப்போமா.?

இந்த நிலையில், கூகுளில் அதிகம் தேடப்பட்ட பட்டியலில் சந்திரயான் – 3 விண்கலம் முதலிடம் பிடித்துள்ளது. கூகுள் இந்தியா நிறுவனம் அதன் வலைதளத்தில் அதிகமானோர் தேடிய ‘டாப் – 10’ தகவல்களின் பட்டியலை ஆண்டுதோறும்,  அந்த ஆண்டு நிறைவு பெறும்போது வழக்கமாக வெளியிட்டு வருகிறது.

அந்தவகையில், கூகுள் இந்தியா நிறுவனம் அதன் வலைதளத்தில் அதிகமானோர் தேடிய தகவல்கள் தொடர்பான 2023ம் ஆண்டுக்கான டாப் 10 பட்டியலை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது, 2023ம் ஆண்டில் இந்தியர்களின் கவனத்தை ஈர்த்த விஷயங்களின் பட்டியலை தேடல் நிறுவனமான கூகுள் வெளியிட்டுள்ளது.

அதில், நிலவில் சந்திராயன் 3 விண்கலத்தை தரையிறக்கி சரித்திரம் படைத்தது குறித்து தான் அதிகளவில் தேடப்பட்டு, தகவல் பகிர்வு உள்ளிட்டவற்றில் முதலிடம் பிடித்துள்ளது. கூகுளால் அதிகம் பகிரப்பட்ட தரவு, அதிகம் தேடப்பட்ட செய்தி தலைப்பு சந்திரயான் -3 தான் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

டாப் ட்ரெண்டிங் நிகழ்வுகள்:

  1. சந்திரயான்-3
  2. கர்நாடக மாநில தேர்தல் முடிவுகள்
  3. இஸ்ரேல் செய்தி
  4. சதீஷ் கௌசிக்
  5. பட்ஜெட் 2023

டாப் ட்ரெண்டிங் தேடல் – What is? 

  1. G20 என்றால் என்ன?
  2. UCC என்றால் என்ன?
  3. ChatGPT என்றால் என்ன?
  4. ஹமாஸ் என்றால் என்ன?
  5. 8 செப்டம்பர் 2023 என்றால் என்ன?

அதிகம் தேடப்பட்ட விளையாட்டு நிகழ்வுகள்:

  1. இந்தியன் பிரீமியர் லீக்
  2. உலகக் கோப்பை கிரிக்கெட்
  3. ஆசிய கோப்பை
  4. மகளிர் பிரீமியர் லீக்
  5. ஆசிய விளையாட்டு

அதிகம் தேடப்பட்ட திரைப்படங்கள்:

  1. ஜவான்
  2. காதர் 2
  3. ஓபன்ஹைமர்
  4. ஆதிபுருஷ்
  5. பதான்
author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்