“அறம் பிறழாது செய்தி வெளியிடுவதே சி.பா.ஆதித்தனாரை போற்றுவதாகும்” – முதல்வர் ஸ்டாலின்..!

தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனாரின் 117-வது நாள் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

தினத்தந்தி நிறுவனர் சி.பா.ஆதித்தனாரின் 117-வது நாள் பிறந்தநாளான இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது.இதனையடுத்து,எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் அவரது பிறந்த நாளை நினைவு கூர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில்,அவரது பிறந்த நாளை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள்,தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியதாவது:

“தமிழ் இதழியலின் முன்னேர் சி.பா.ஆதித்தனார் அவர்களின் 117-ஆவது பிறந்தநாள்! தினத்தந்தி தொடங்கி எளிய மக்களுக்கு எழுத்தறிவித்து உலக நடப்புகளை அறியத்தந்த அவர்; கழக அரசில் பேரவைத் தலைவராகவும் அமைச்சராகவும் திறம்படச் செயலாற்றியவர்.அறம் பிறழாது செய்தி வெளியிடுவதே அவரைப் போற்றுவதாகும்”,என்று பதிவிட்டுள்ளார்.

சி. பா. ஆதித்தனார் இந்திய வழக்கறிஞர், அரசியல்வாதி, அமைச்சர் ஆவார்.அவர் இரண்டு முறை சென்னை சட்டமன்ற உறுப்பினராகவும், நான்கு முறை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். அவர் 1967–68 இல் சட்டசபை சபாநாயகராகவும், 1969 மற்றும் 1971 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் அமைச்சரவையில் தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தார். அவரது நினைவாக, இரண்டு தமிழ் இலக்கிய விருதுகள் உருவாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.