பயனாளிகளுக்கு பட்டா கிடைத்திடும் என முதல்வர் உத்தரவாதம் அளித்திடுக -ஸ்டாலின்..!

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அறிவித்த இலவச வீட்டுமனைப்பட்டா திட்டத்தை பத்தாண்டுகளாக முடக்கி செயல் இழக்க வைத்திருக்கிறது அதிமுக அரசு. புறம்போக்கு நிலங்களில் 5 ஆண்டுகள் தொடர்ந்து குடியிருந்தால் போதும் என நிபந்தனை மாற்றி, ஏழை எளியோர்க்கும் பட்டா கிடைப்பதற்குரிய ஆணை பிறப்பித்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்.

அதிமுக ஆட்சியில் ஆண்டு வருமானம்- நில மதிப்பு நிபந்தனைகளை மாற்றி யாருக்கும் பட்டா கிடைக்க கிடைத்து விடக்கூடாத நோக்கில் அரசு செயல்பட்டது. நிலப்பதிவேட்டை முறையாக பதிவு செய்யவில்லை; பயனாளிகளையும் அடையாளம் காணவில்லை.

சென்னையிலும் தமிழகம் முழுவதும், பல இடங்களிலும் பட்டா கோரி மக்கள் போராடினார்கள். தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வருவதற்கு இரு மாதங்கள் உள்ள நிலையில், கண்துடைப்பு “பட்டா மேளாவை” நடத்த திட்டமிட்டுள்ளார் முதலமைச்சர். வசூல் செய்துகொண்டு, தாசில்தார்களை மிரட்டி, அதிமுகவினர் காட்டும் நபர்களாக பயனாளிகள் தேர்வு நடைபெறுகிறது.

ஆட்சேபணை இல்லாத நிலங்களில் குடியிருப்போருக்கும், ஏழைகளுக்கும், பட்டா வழங்குவதில் வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்; பட்டா மேளா மூலம் உண்மையான பயனாளிகளுக்கு உதவுவதற்கு முதலமைச்சர் எடப்பாடி திரு.பழனிச்சாமி உத்தரவிட அளித்திட வேண்டும் என அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

author avatar
murugan