தாமிரபரணி ஆற்றில் நீர் திறக்க முதல்வர் பழனிசாமி ஆணை.!

தாமிரபரணி ஆற்றிலிருந்து தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு நீர்த்தேக்கங்களில் இருந்து நீர் திறக்க முதல்வர் பழனிசாமி ஆணையிட்டுள்ளார். குடிநீர் மற்றும் இதர பயன்பாட்டிற்காக ஆகஸ்ட் 18 முதல் 31 வரை 1,693.44 மி.கன அடி நீர் திறக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இதுபோன்று, மேட்டூர் அணையிலிருந்து வரும் 18 ஆம் தேதி முதல் புள்ளம்பாடி, புதிய கட்டளைமேட்டு கால்வாய்களில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று முதல்வர் உத்தரவிட்டுள்ளார். வரும் 18 ஆம் தேதி முதல் டிசம்பர் 31 வரை 136 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

தண்ணீர் திறப்பின் மூலம் திருச்சி, தஞ்சாவூர், அரியலூர் போன்ற மாவட்டங்களில் 42,736 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார். விவசாயிகள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி உயர் மகசூல் பெற கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்