கொரோனா நிவாரண நிதி ரூ.2000 வழங்கும் திட்டம் இன்று முதல் ஆரம்பம்..!

கொரோனா நிவாரண நிதியின் முன்தவனையாக ரூ.2000 வழங்கும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

கடந்த மே 7ஆம் தேதியன்று தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில்,5 முக்கிய கோப்பில் கையெழுத்திட்டர்.அதில், ஓன்று கொரோனா நிவாரணமாக ரூ.4,000 வழங்கும் கோப்பில் முதலில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.கொரோனா நிவாரண நிதி முதல் தவணையாக தலா ரூ.2 ஆயிரம்,2.7 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இம்மாதம் வழங்க முதலமைச்சர் புதிய உத்தரவு பிறப்பித்தார்.

இதனைத் தொடர்ந்து,கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் மே 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவையும் முதல்வர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில்,கொரோனா நிவாரண நிதியின் முன்தவனையாக ரேஷன் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.2000 வழங்கும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

அதன்படி,கொரோனா நிவாரண நிதி ரூ.2000 பெறுவதற்கான டோக்கன்கள் வீடுகளுக்கே வந்து விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.