இனியும் கால தாமதம் செய்தால், வீதியில் இறங்கி போராடுகின்ற சூழல் ஏற்படும் – EPS எச்சரிக்கை!

கொரனாவால் உயிரிழந்தவர்களுக்கு நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை. இதுதொடர்பாக முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் அனைவரின் குடும்பங்களுக்கும் நிவாரணமாக ரூ.50,000 வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிதியை வழங்குவதற்காக, தேசிய பேரிடர் மேலாண்மை நிதியத்தில் இருந்து மத்திய அரசு, மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்து அறிவித்துள்ளது. மாநில அரசுகள் மத்திய அரசு ஒதுக்கும் நிதியோடு, … Read more

#Breaking:ரேசன் கடைகளுக்கான அதிரடி அறிவிப்பு – தமிழக அரசு…!

ரேஷன் கடைகளில் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் கொரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணையை வருகின்ற 25 ஆம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்தால் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, கடந்த மாதத்தில் கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. இதனையடுத்து,கடந்த ஜூன் 15 ஆம் தேதி முதல் … Read more

#Breaking:ஊடகவியலாளர்களுக்கு ரூ.5000 கொரோனா உதவித்தொகை -திருமாவளவன் வலியுறுத்தல்..!

அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் கொரோனா உதவித்தொகையாக ரூ.5000 வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சட்ட மன்ற உறுப்பினரும்,விசிக தலைவருமான திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக,விசிக தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அல்லலுறும் ஊடகவியலாளர்களுக்கு 5,000 ரூபாய் உதவித்தொகையும் அவர்களில் யாரேனும் இறந்துவிட்டால் அவர்களது குடும்பத்துக்கு 10 லட்ச ரூபாய் நிவாரணமும் வழங்கப்படும் என்று,தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்த உதவித்தொகையைப் பாரபட்சமின்றி அனைத்து ஊடகவியலாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் … Read more

முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.5 கோடி வழங்கிய சக்தி மசாலா நிறுவனம்..!

முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.5 கோடியை சக்தி மசாலா நிறுவனம் வழங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலையானது விஸ்வரூபம் எடுத்து வருகிறது.இதன்காரணமாக,கொரோனா பேரிடரை தமிழகம் எதிர்கொள்ளவதற்கு தங்களால் முடிந்த தொகையை முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடையாக அளிக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்தார். இதனையடுத்து,முதல்வரின் கோரிக்கையை ஏற்று ஏழை மக்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த நிதியுதவி அளித்து வருகிறார்கள். இந்நிலையில்,கொரோனா தடுப்பு பணிகளுக்காக சக்தி மசாலா நிறுவனம் முதல்வரின் … Read more

#BREAKING: கொரோனா நிதி.., திமுக எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஒருமாதம் ஊதியம்..!

திமுக எம்.பி, எம்.எல்.ஏக்கள் ஒரு மாத ஊதியத்தை முதலமைச்சர் பொது நிவாரண நிதி’க்கு வழங்குவார்கள் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலையால் நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி வருகிறது. அதிலும், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலங்களில் தமிழ்நாடு உள்ளது.  கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் தற்போது கொரோனா கட்டுப்பாட்டுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட தமிழகத்தின் பொருளாதாரம் மீண்டெழுவதற்கு, இந்த பேரிடரை எதிர்கொள்ளவதற்கு தங்களால் இயன்ற வகையில் உதவிட … Read more

கொரோனா நிவாரண நிதி ரூ.2000 வழங்கும் திட்டம் இன்று முதல் ஆரம்பம்..!

கொரோனா நிவாரண நிதியின் முன்தவனையாக ரூ.2000 வழங்கும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். கடந்த மே 7ஆம் தேதியன்று தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நிலையில்,5 முக்கிய கோப்பில் கையெழுத்திட்டர்.அதில், ஓன்று கொரோனா நிவாரணமாக ரூ.4,000 வழங்கும் கோப்பில் முதலில் மு.க.ஸ்டாலின் கையெழுத்திட்டார்.கொரோனா நிவாரண நிதி முதல் தவணையாக தலா ரூ.2 ஆயிரம்,2.7 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு இம்மாதம் வழங்க முதலமைச்சர் புதிய உத்தரவு பிறப்பித்தார். இதனைத் தொடர்ந்து,கொரோனா பரவல் அதிகரிப்பின் … Read more

கொரோனா நிவாரண நிதி விவரத்தை வெளியிட – தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு .!

முதலமைச்சர் கொரோனா நிவாரண நிதி மூலம் பெறப்பட்ட நிதி எவ்வளவு என்ற விவரத்தை வெளியிட  தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு  தமிழகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு எவ்வளவு தொகை வந்தது.? என்ற விவரங்கள்  அறிவிக்கவில்லை எனக் கூறி வழக்கறிஞர் கற்பகம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். அவர் அளித்த அந்த மனுவில், முதலமைச்சர் பொது நிவாரண நிதி வழங்கியவர்கள் யார் யார்..?  என்பது குறித்த எந்த விவரங்களும் குறிப்பிடப்படவில்லை … Read more